Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் தீ!!

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் தீ!!

6 ஆனி 2025 வெள்ளி 21:28 | பார்வைகள் : 5739


பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் Balard பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று மாலை திடீரென தீ பரவியது. பரிஸ் தீயணைப்பு படையினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Place Balard  பகுதியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இந்த தீ பரவியுள்ளது. மாலை 7.30 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 50 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வானத்தில் பெரும் கறுப்பு புகை மண்டலம் சூழ்ந்துள்ளதை காணாக்கூடியதாக உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்