நாடு முடக்கத்துக்குப் போகும் நிலை - போராட்டம் அறிவிப்பு
6 ஆனி 2025 வெள்ளி 18:14 | பார்வைகள் : 10840
பிரான்சின் தேசிய லவடகை வாகன (Taxii) சங்கம், ஜூன் 11 புதன்கிழமை புதிய வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள், நோயாளிகள் பயண சேவைக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.
FNDT செயலாளர் டொமினிக் புவிசோன், அரசாங்கம் எங்களைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறது – உண்மையில் எதுவும் செய்யவில்லை, எங்களைக் கைவிட்டுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
வாடகை வாகன சாரதிகள், பொருளாதார அமைச்சரகத்தையும் மேலும் ORLY மற்றும் Charles de Gaulle விமான நிலையங்களையும் முடக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் கூட முடக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
புதிய கட்டண முறை அக்டோபர் 1 முதல் அமலில் வர உள்ளது. நோயாளி பயணங்களுக்கு 13 யூரோ மற்றும் கிலோமீட்டருக்குரிய கட்டணம் மட்டுமே வழங்கப்படும். 2024 இல், மருத்துவப் பயணச் செலவுகள் 6.74 பில்லியன் யூரோ சென்றுள்ளன என மருத்துவக் காப்புறுதி தெரிவித்துள்ளது.
மே இறுதியில் நடந்த வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் இடையூறு ஏற்பட்டது. தற்போதைய அமைதி, அமைச்சுப் பேச்சுவார்த்தைகளால் எந்தவிதப் பயனான முடிவுகளும் எட்டப்படாமையால் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan