பயிற்சி ஓட்டத்தின் போது கணாமற்போன அகெதே உடலமாக மீட்பு!!
5 வைகாசி 2025 திங்கள் 19:13 | பார்வைகள் : 4262
Vivonne (Vienne) நகரில் ஜோகிங் ஓட்டத்தின் போது கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி அகெதே ஹிலாரியே (Agathe Hilairet) காணாமற் போயிருந்தார்.
அகெதே ஹிலாரியே காணாமற் பேனது பற்றியும், தொடர்ச்சியான ஜோந்தார்மினரின் தேடுதல் பற்றியும் பரிஸ் தமிழ் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 4ம் திகதி அவர் ஓடப்பபோன இடத்திற்கு அருகிலேயே மரங்களின் கீழ் இவரது உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் ஜோந்தார்மினரால் துல்லியமாகத் தேடப்பட்ட இடமாகும். அங்கு ஓடச் சென்ற ஒருவரே இந்த உடலத்தைக் கண்டு ஜோந்hர்மினர்க்கு அறிவித்துள்ளனர்.
உடற்கூற்றியல் குறிப்பிட்டளவு தகவல்களை வழங்கவில்லை என்பதால், உடலம் கிடந்த பகுதி பகுப்பாய்வுக் குழுவினரால் ஆராயப்பட்டு வருகின்றது.
முதற்கட்டத் தகவல்களின் படி வேறு இடத்திற்குக் கடத்திச் சென்று கொன்று விட்டு, இங்கு கொண்டு வந்து போடப்பட்டதாகவே விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இக்கோணத்திலேயே தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan