விடைபெறுகிறது Skype.. மைக்ரோசாப்ட் எடுத்த அதிரடி முடிவு - என்ன காரணம்?

5 வைகாசி 2025 திங்கள் 15:39 | பார்வைகள் : 2334
2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.
கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும் வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.
Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.
Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1