CAF தண்டனையும் இரத்துச் செய்தலும்! முழுமையான விபரம்!
4 வைகாசி 2025 ஞாயிறு 13:10 | பார்வைகள் : 11013
தேசிய குடும்ப உதவித்தொகை நிதியம் (CNAF) 2024 ஆம் ஆண்டில் நிதி மோசடி 20 சதவீத அதிகரி;த்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை, அறிவித்துள்ளது.
தேசிய குடும்ப உதவித்தொகை நிதியமான CNAF (Caisse nationale des allocations familiales)) இன் தலைமை இயக்குனர் Nicolas Grivel இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த மோசடிகளைத் தவிர்க்க, பயனாளர்களின் தரவுகள் அடிக்கடி சோதனை செய்யப்பட்டுச் சரிபார்க்கப்படும் எனவும், தரவுகளில் தவறு அல்லது மோசடி செய்பவர்களிற்கு அதியுச்சமான குற்றப்பணம் விதிப்பதோடு, அவர்களின் உதவிகளும் நிறுத்தப்படும் எனவும் தலைமை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இந்த மோசடிகளால் 450 மில்லியன் யூரோக்கள் நட்டமடைந்துள்ளது எனவும் தொடர்ச்சியான கண்காணிப்பினால் இதில் 80 சதவீதம் மீளப் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சமூக்கொடுப்பனவைப் பெறுவதற்கு பிரான்சில் ஒரே விலாசத்தில் குறைந்தது 9 மாதங்கள் விசித்து வந்தால் மட்டுமே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும். பலர் வெளிநாடுகளில் பல மாதங்கள் தங்கியிருந்தாலும் இந்த உதவித் தொகைகளைப் பெற்று மோசடி செய்து வந்துள்ளனர்.
இது மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
சமூகவலைத்தளங்களில் மோசடி செய்வது எப்படி என்று சட்டவிரோத விடங்கள் பதியப்பட்டுள்ளன. ஒருவரின் அமையாளத்தை எப்படி அபகரிப்பது, எவ்வாறு பணம் பெறுவது போன்ற விடயங்கள் பதியப்பட்டுள்ளன. இது தனிமனித மோசடிக்கும் அப்பாற்பட்டது.
இப்படியான குற்றம் செய்பவர்கள் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்கள் எனவும் CNAF தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan