சமூக வலைதளத்தில் வைரலாகும் போப் ஆக மாறிய ட்ரம்பின் புகைப்படம்
3 வைகாசி 2025 சனி 12:32 | பார்வைகள் : 3969
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் போப் போல் ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்ரல் 21ல் காலமானார்.
புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகளில் வாடிகன் தயாராகி வருகிறது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கியை பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் அடுத்த போப் தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்.அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan