Drancy : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!!

3 வைகாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 4571
சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயம் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில், காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று மே 2, வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Drancy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்று இடம்பெறுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள், பயந்தயத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய முற்பட்டனர்.
அதன்போது காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டு மேற்கொண்டதாகவும், அதில் ஒருவர் காயமடைந்ததாகவும், கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1