வன்முறைக்காகக் கலைக்கப்படும் பொது அமைப்புக்கள்!!
30 சித்திரை 2025 புதன் 08:37 | பார்வைகள் : 3601
தொடர்ச்சியான வன்முறைகள், பிரெஞ்சு மண்ணில் யூதர்களிற்கு எதிரான தாக்குதல்கள் என பல காரணங்களிற்காக மூன்று அமைப்புகளை உள்துறை அமைச்சர் தடைசெய்து கலைக்க உள்ளார்.
இதில் முதலாவதாக Jeune Garde antifascist எனப்படும் இளம் பாசிச எதிர்ப்புப் படையினரின் தொடர்ச்சியான வன்முறைகளினால் பலர் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதுடன், வன்முறைகள் மீண்டும் தொடர்வதால் இந்த அமைப்புத் தடைசெய்து கலைக்கப்படுகின்றது.
அடுத்ததாக பிரெஞ்சு மண்ணில் யூதர்கள் மீதான தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதலுடன் அவர்கள மீதான வன்முறையைத் தூண்டும் பிரச்சாரமும் செய்து வரும் Urgence Palestine என்ற அமைப்பும் தடை செய்யப்படுகின்றது. பலஸ்தீன மக்களிற்கான உதவி அமைப்பு என்று ஆரம்பிக்கப்பட்டு, வன்முறைகளை மட்டுமே பிரெஞ்சு மண்ணில் செய்து வருவதால் இதுவும் தடைசெய்யப்படுகின்றது.
பிரபலமாகாத ஆனால் வன்முறையாளர்களை மட்டும் கொண்ட அதி தீவிர வலதுசாரி அமைப்பான Lyon Populaire அமைப்பும் தடைசெய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan