Bagnolet : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!!
25 வைகாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5088
Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. Rue Robespierre வீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களின் சந்திப்பு மையம் ஒன்றின் அருகே ஆயுததாரிகள் இருவர் நபர் ஒருவரை நோக்கி பலதடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் இரண்டு குண்டுகள் குறித்த நபர் மீது பாய்ந்துள்ளது. கால் மற்றும் பின் பக்கத்தில் பாய்ந்த குண்டினால் அவர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதே பகுதியில் சென்றவருடம் ஜூலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan