Drancy: மகிழுந்து மோதி ஐவர் காயம்!ஓட்டுநர் தப்பி ஓட்டம்!
18 வைகாசி 2025 ஞாயிறு 22:58 | பார்வைகள் : 4063
Drancy(Seine-Saint-Denis) நகர மையத்தில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் மோசமான வாகன விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த ஒரு மகிழுந்து, மற்றொரு மகிழுந்தை மோதியதால் மகிழுந்தில் இருந்த ஐந்து பேரும் காயமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு (centre hospitalier Jean-Verdier à Bondy) அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் இருந்த 3 வயது சிறுவன், வாகனத்தின் பின்பக்க கண்ணாடி வழியாக வெளியே வீசப்பட்டதால் கடுமையாக காயமடைந்து, அவனது உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தின் பிறகு, காரை ஓட்டியவர் தப்பிச் சென்றுள்ளார். அவரது நண்பர், “நான் தான் ஓட்டுநர்” என பொய் கூறியுள்ளார். ஆனால் புகைப்படகாட்சிகள் உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.
அதன் பின்னர் உண்மையான ஓட்டுநர் சில நிமிடங்களில் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan