போதைப்பொருளை தடுக்க இராணுவம்..! - மக்களின் கருத்து!!
18 வைகாசி 2025 ஞாயிறு 15:44 | பார்வைகள் : 4026
போதைப்பொருள் கடத்தலை தடுக்க இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் அரசு ஆலோசனை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் 76% சதவீதமான மக்கள் 'இராணுவத்தை பயன்படுத்த வேண்டும்' என ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். 23% சதவீதமானோர் 'இராணுவரத்தை பயன்படுத்தக்கூடாது' என தெரிவித்துள்ளனர். ஏனைய 1% சதவீதமானவர்கள் 'இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிட மறுப்பதாக' தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை CNEWS, Europe 1, மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை, இதேபோன்ற கருத்தை 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டபோது 66% சதவீதமானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan