வெயிலை அனுபவியுங்கள் - பெருமழை வருகின்றது - 42மாவட்டங்கள் எச்சரிக்கையில்!
17 வைகாசி 2025 சனி 01:09 | பார்வைகள் : 15727
ஒரு வார சூரிய வெளிச்சத்திற்குப் பிறகு, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் பெருமழை பெய்யப்போகின்றது என்று வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
20 மே செவ்வாய்க்கிழமை முதல், 42 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெருமழைகள் தென்மேற்குப் பகுதியில் தொடங்கி, அதே நாளில் தொடர்ந்து கிழக்குப் பகுதிகளுக்கு பரவக்கூடும் எனவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் பாதிப்பிற்குள்ளாகப் போகும் மாவட்டங்களாக les Deux-Sèvres, la Vienne, la Haute-Vienne, la Creuse, l’Allier, la Loire, le Rhône, l’Ain, la Haute-Savoie, la Savoie, l’Isère, le Puy-de-Dôme, la Corrèze, la Charente, la Dordogne, la Charente-Maritime, la Gironde, le Lot-et-Garonne, le Lot, le Cantal, la Haute-Loire, l’Ardèche, la Drôme, les Hautes-Alpes, les Alpes-de-Haute-Provence, le Vaucluse, le Gard, la Lozère, l’Hérault, les Alpes-Maritimes, le Var, les Bouches-du-Rhône, le Tarn, l’Aude, les Pyrénées-Orientales, l’Ariège, la Haute-Garonne, le Tarn-et-Garonne, les Landes, les Pyrénées-Atlantiques, les Hautes-Pyrénées, le Gers ஆகியவை அமைந்துள்ளன.
வியாழன் வரை மழை தொடரும் வாய்ப்பு
21 மற்றும் 22 மே (புதன் மற்றும் வியாழன்) ஆகிய நாட்களில் மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், இது இடி, மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்யக்கூடும் எனவும்; கூறப்படுகிறது. இது சில இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஆபத்தையும் எற்படுத்தக்கூடும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan