அனுமதி இல்லாமல் பதிவு செய்த Siri… Apple 95 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த ஒப்புதல்
11 வைகாசி 2025 ஞாயிறு 18:43 | பார்வைகள் : 3267
அமெரிக்காவில் Apple-ன் Siri recordings விவகாரம் தற்போது முடிவுக்கு வருகிறது.
Apple நிறுவனம், தனது Siri செயலி பலரது அனுமதி இல்லாமல் உரையாடல்களை பதிவு செய்ததாக வழக்கில் சிக்கியுள்ளது.
இதற்காக $95 மில்லியன் அபராதமாக செலுத்த Apple ஒப்புக்கொண்டுள்ளது.
2014 முதல் 2024 வரை Siri செயலியை iPhone, iPad, Mac, Apple Watch, HomePod போன்ற சாதனங்களில் பயன்படுத்திய அமெரிக்க பயனாளர்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
தற்செயலாக Siri செயலி இயங்கிவிட்டு, தனியுரிமை உரையாடல்களை பதிவு செய்தது முக்கிய புகாராக உள்ளது.
யார் பெறலாம் இத்தொகையை கோரலாம்?
• அமெரிக்காவில் வசிக்கும் Apple சாதனங்களை பயன்படுத்தியவர்கள்
• Siri தானாக செயல்பட்டு உரையாடல் பதிவு செய்ததாக உறுதிமொழி வழங்கவேண்டும்
• இந்த தொகையை பெற சாதனங்களுக்கு வாங்கிய ரசீது தேவையில்லை
• சாதனத்திற்கு $20 வரை பெற முடியும்
• கோரிக்கை செய்ய கடைசி நாள்: ஜூலை 2, 2025
Apple தனது செயல்களில் தவறு ஏதும் செய்ததில்லை என்று தெரிவித்தாலும், நீண்டகால சட்டப்போராட்டத்தை தவிர்ப்பதற்காகவே இந்த சமரசம் செய்யப்படுவதாகவும், இது குற்ற ஒப்புதல் அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan