சமூக வலைத்தளங்களுக்கு தடை! சட்ட நடவடிக்கைகள்!

11 வைகாசி 2025 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 4935
15 வயதுக்கு முன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் கிளாரா சப்பாஸ் (Clara Chappaz) இன்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு பொது சட்டத்தை உருவாக்க, ஸ்பெயின்( l'Espagne), கிறிஸ் (la Grèce) மற்றும் அயர்லாந்து (l'Irlande) போன்ற நாடுகள் கூட்டணி சேர்ந்து உள்ளன. இது தொடர்பாக பிரான்ஸ் 3 மாதங்கள் அவகாசம் எடுத்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒப்பந்தம் சரிவரவில்லை என்றால், பிரான்ஸே தனியாக நடவடிக்கை எடுக்கும் என கிளாரா சப்பாஸ் தெரிவித்துள்ளார்.
2024 ஜூனில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 11 வயதுக்கு முன் தொலைபேசி மற்றும் 15 வயதுக்கு முன் சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
ஸ்பெயின், 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களில் சேருவதை தடை செய்யும் சட்டத்தை முன்வைத்துள்ளது. இந்நிலையில், "le règlement sur les services numériques" சட்டத்தை வலுப்படுத்தி, வயது சரிபார்ப்பு இல்லாமல் கணக்குகள் உருவாக்கப்பட முடியாத நிலையை உருவாக்க வேண்டும் என கிளாரா சப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1