ரிவி விற்பனையில் சாதனை படைத்த Samsung
10 வைகாசி 2025 சனி 17:58 | பார்வைகள் : 3440
ஒரே ஆண்டில் ரூ.10,000 கோடிக்கு Samsung TV-க்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடிக்கு மேல் TV விற்பனை செய்து, Samsung நிறுவனம் இந்திய டிவி சந்தையில் முன்னணியாக திகழ்கிறது.
வளர்ச்சியற்ற ஆண்டாக இருந்த போதிலும், 9 சதவீத விற்பனை உயர்வுடன் Samsung சாதனை படைத்துள்ளது. இப்போது 2025-ல் இரட்டை இலக்க வளர்ச்சியை நோக்கி விரைகிறது.
பிரீமியம் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் அதிகரித்து வருவதால், 55 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட பாரிய ஸ்கிரீன் ரிவிகள் தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இத்தகைய ரிவிகள் சிறிய நகரங்களிலும் தேவை அதிகரிக்கிறது. “55 அங்குலம் இன்று சாதாரண அளவாகி விட்டது; 75, 100, 115 அங்குலம் புதிய வாடிக்கையாளர் ஈர்ப்பை உருவாக்குகின்றன,” என சம்சுங் இந்தியாவின் மூத்த இயக்குநர் டேங் தெரிவித்தார்.
2025-க்கான புதிய ரிவி வரிசையில் Neo QLED 8K, OLED, The Frame ஆகியவை இடம்பெற்றுள்ளன. விலை ரூ.49,490 முதல் ரூ.11 லட்சம் வரை உள்ளது.
புதிய Vision AI தொழில்நுட்பம் மூலம், படம் மற்றும் ஒலி தரத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தானாக மாற்றும் திறன், கையசைவுகளை அடையாளம் காணும் Universal Gesture Control, Galaxy Watch இணைப்பு என பல புதிய அம்சங்கள் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan