ஜோந்தார்ம் வீரர் மீது துப்பாக்கிச்சூடுகள்!!
10 வைகாசி 2025 சனி 17:10 | பார்வைகள் : 4196
Aix-en-Provenc இல் ஜோந்தார்ம் வீரர் மீது கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வில் பெற்றோர் வீட்டிற்குச் சென்று கொண்டு இருக்கையில் நேற்று இவர் மீது கடும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நள்ளிரவு 0h55 அளவில் இவரை அவசர முதலுதவிப் படையினர் (SAMU) வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
கை, கால், முதுகு, பின்புறம் என சரமாரியான துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. இந்த இராணுவ வீரரிற்கு உயிர் ஆபத்தில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவலின் படி ஒரு சிற்றுந்தில் வந்த மூவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பியோடி உள்ளனர்.
காவற்துறையினரின் சிறப்பு விசாரணைப்படையினரிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan