டெஸ்டில் ஓய்வுபெறும் விராட் கோஹ்லி….?
10 வைகாசி 2025 சனி 14:38 | பார்வைகள் : 4717
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியான நிலையில், மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
சூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்துவிட்டதால் பெற்றுவிட்டதால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க மாட்டார்.
இந்த நிலையில், மற்றொரு அனுபவ வீரரான விராட் கோஹ்லியும் (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக தகவல் வெளியானது.
ஆனால், பிசிசிஐ விராட் கோஹ்லியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை எனவும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர் இன்னும் நம்பமுடியாத அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கிறார்.
உடைமாற்றும் அறையில் அவரது இருப்பு முழு அணியையும் உயர்த்துகிறது. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் அவரிடம் கேட்டுக் கொண்டோம்" என்றார்.
இந்த விடயத்தில் கோஹ்லி எந்த பொது அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனாலும் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆதரவு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
கோஹ்லி இதுவரை 123 டெஸ்ட் (210 இன்னிங்ஸ்) போட்டிகளில் 9,230 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan