ChatGPT - போலியாக உருவாக்கப்படும் ஆதார், பான் கார்டுகள்
10 சித்திரை 2025 வியாழன் 10:06 | பார்வைகள் : 7624
OpenAI நிறுவனத்தின் ChatGPT வெளியானதில் இருந்தே தனியுரிமை சிக்கல்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக கருத்துருவாக்கம் மற்றும் பட உருவாக்கம் தொடர்பாகவே சிக்கலை அதிகரிக்க செய்தது.
மிகவும் யதார்த்தமான மற்றும் துல்லியமான கருத்துக்களை உருவாக்கும் AI இன் திறன் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது, இதனால் போலியான ஆவணங்களை எளிதாக உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் பொதுவாகவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்களை துல்லியாக உருவாக்குவதில் சிரமப்படுகிறார்கள். ஆனால் ChatGPT இந்த சிக்கலை சர்வசாதாரணமாக நொறுக்கியுள்ளது.
சில சமூக ஊடகப் பயனர்கள் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில், அசலான அரசாங்க ஆவணங்களை ChatGPT தயார் செய்து வழங்கியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பயனர் ஒருவர் தெரிவிக்கையில் ChatGPT போலியான ஆதார் மற்றும் பான் அட்டைகளை அச்சு அசலாக உருவாக்கியுள்ளது, உண்மையில் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பெயர் மற்றும் பிறந்த திகதி மட்டும் தரவுகளாக அளித்தால் ChatGPT அசலான அரசாங்க ஆவணங்களை தயாரித்து விடுகிறது என இன்னொரு பயனர் வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி AI அரசாங்க ஆவணங்களை உருவாக்குவதில்லை என்றே சிலரது வாதமாக உள்ளது. இருப்பினும் AI தொழில்நுட்பத்தின் இப்படியான வளர்ச்சி என்பது ஆபத்து என்றே கூறுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan