வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
8 சித்திரை 2025 செவ்வாய் 17:02 | பார்வைகள் : 3175
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது.
* இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.
* பின்னர் அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.
* 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
* இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கவர்னர் மசோதாவை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.
* இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
* தி.மு.க.,வின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலைநாட்ட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan