வெற்றிமாறன் – ஜூனியர் என்டிஆர் திடீர் சந்திப்பு…. காரணம் என்ன ?
5 சித்திரை 2025 சனி 14:50 | பார்வைகள் : 2491
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இவர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இருப்பினும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீப காலமாக வெளிவரும் தகவல் என்னவென்றால், நடிகர் சூர்யா தன்னுடைய 45 ஆவது திரைப்படத்தை முடித்த பின்னர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்க உள்ளார் எனவும் இதன்பிறகு தான் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆர் கூட்டணி இணைய போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
இந்நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் திடீர் என ஜூனியர் என்டிஆர் -ஐ நேரில் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.இவர்களின் சந்திப்பு குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றாலும் இது அடுத்த படத்திற்கான கண்டிப்பாக இருக்கலாமோ? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சூர்யா தன்னுடைய 46வது படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் வெற்றிமாறன் – ஜூனியர் என்டிஆர் ப்ராஜெக்ட் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த மற்ற அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan