மே முதலாம் திகதி வெப்பமா - மழையா -புயலா?

29 சித்திரை 2025 செவ்வாய் 11:08 | பார்வைகள் : 4564
இந்த வாரத்தில் இருந்து அதிகரிக்கும் வெப்ப நிலையால், மே முதலாம் திகதி விடுமுறையிலிருந்து வார இறுதிவரை இருக்கும் நீண்ட விடுமுறை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், பிரான்சின் பொரும்பாலான பகுதிகளில் மிகச் சிறந்த கால நிலை நிலவும் எனவும் மகிழ்ச்சியான தகவலை, பிரான்சின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குளிர்கால ஆடைளை மீண்டும் அலமாரியில் வைக்க வேண்டிய சிறப்பான இளவேனிற்காலம் ஆரம்பித்து விட்டது எளவும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் சில பகுதிகளில் மட்டும் வார இறுதியில் பெருமழை பெய்ய உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1