இரு நாட்களில் பாகிஸ்தானை சேர்ந்த 272 பேர் வெளியேற்றம்
28 சித்திரை 2025 திங்கள் 07:52 | பார்வைகள் : 2300
கடந்த 2 நாட்களில் எல்லைப்பகுதியான அட்டாரி வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த 272 பேர் வெளியேறி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி,காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து,பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில்,கடந்த இரண்டு நாட்களில் அட்டாரி-வாகா எல்லைப் புள்ளி வழியாக சுமார் 272 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 12 வகையான குறுகிய கால விசா வைத்திருப்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அவ்வாறு முடிவடையும் போது இன்னும் சில நுாறு பேர் வெளியேறுவார்கள். இவர்களில் முக்கியமாக மதம், குடும்ப விஜயம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் அடங்குவர்.
அதேபோல, பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லை வழியாக 13 ராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 629 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan