பாடசாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளின் எதிரொலி!!
25 சித்திரை 2025 வெள்ளி 10:28 | பார்வைகள் : 13342
நேற்றைய நோந்த் பாடசாலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கொலேஜ் மற்றும் லிசேக்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான திட்டத்தினை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும், உள்துறை அமைச்சரிற்கு பிரதமர் ஆணையிட்டுள்ளார்.
கொலேஜ் லிசேக்களில் ஆயுதக் கலாச்சாரம் 2024 ஆம் ஆண்டிலிருந்து 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கலவியமைச்சர் எலிசபெத் பேர்ன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் விமான நிலையம் போல் பாதுகாப்புக் கடவை (portique de sécurité) வைக்வேண்டும் எனப் பிரதமர் கூறியமை பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

«இதனால் சோதனை செய்யப்பட்டு, மாணவர்கள் லிசேக்கள் போவதற்குப் பல மணிநேரங்கள் முதலே வரவேண்டி இருக்கும்»
«அத்தோடு கொலேஜ், லிசே வாசல்களில் மாணவர்கள் குவிந்து வரிசையில் நிற்க நேரிடும். அதுவே அவர்கள் மீதான தாக்குதலிற்கு வழிவகுக்கும்»
«வரிசையில் அதிக நேரம் நிற்பதால் பலிரிற்கு மன உளைச்சல் உண்டாகும். இதுவே சக மாணவர்கள் மீதான தாக்குதல்களையும் அதிகரிக்கும்»
என, பல எதிர்க்கட்சிகள் பிரதமரின் பாதுகாப்புக் கடவைத் திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan