அசத்தும் வசதிகளுடன் - புதிய Ouigo தொடருந்துகள்!!
25 சித்திரை 2025 வெள்ளி 10:00 | பார்வைகள் : 4198
குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் Ouigo தொடருந்து சேவைகளில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. நேற்று ஏப்ரல் 24, வியாழக்கிழமை தொடருந்தின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பானா விபரங்களை SNCF நிறுவனம் வெளியிட்டது.

மொத்தமாக 12 புதிய தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
10% சதவீதம் அதிக இடவசதி கொண்டவையாக இருக்கைகள் அமைந்திருக்கும்.
220V அல்லது USB-C வசதியுடன் கூடிய மின்னேற்றிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
உயரமான முதுகு பகுதி கொண்ட நீல நிற மற்றும் கழுத்தினை தாங்கும் பகுதியும் கொண்ட இருக்கைகளாக அமைந்துள்ளது. முன்பாக புத்தகம, உணவு, மடிக்கணணி போன்றவற்றை வைக்கைக்கூடிய சிறிய மேசை வசதியும் உண்டு.
மின்சார ஸ்கூட்டர்கள், மிதிவண்டிகள் நிறுத்த போதிய இடவசதி வழங்கப்படுவதுடன், மின்சார ஸ்கூட்டர்களை மின்னேற்றவும் முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 653 பயணிகள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 38 தொட்டருந்துகள் சேவையில் உள்ளன. இவற்றை 2027 ஆம் ஆண்டுக்குள் 50 தொடருந்துகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது வருடாந்தம் 33 மில்லியன் பயணிகளைக் கொண்ட இச்சேவையில் 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 8 மில்லியன்களால் பயணிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan