தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதியின் இளவரசர்
23 சித்திரை 2025 புதன் 17:37 | பார்வைகள் : 2420
சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என அறியப்படுகிறார்.
இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில், மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக. 21 ஆண்டுகளாக கோமா நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் 21 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறார்.
2019 ஆம் ஆண்டு, விரலைத் தூக்குவது அல்லது தலையை லேசாக அசைப்பது போன்று, அவரது உடலில் லேசான அசைவுகள் தென்பட்டன. ஆனால் அதன் பின்னர் நினைவு திரும்பவில்லை.
"கடவுள் அவன் உயிரை எடுக்க விரும்பியிருந்தால், விபத்தின் போதே நடந்திருக்கும். அவர் மீண்டு வருவார்" என அவரது தந்தை காலித் பின் தலால் அல் சவுத் 21 வருடங்களாக வலியுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலாலின் 36வது பிறந்தநாளுக்கு சமூகவலைத்தளம் மூலம் பலரும் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்தனர்.
இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் தற்போதைய சவூதி அரேபியா மன்னரின் நேரடி மகன் இல்லை. இளவரசர் அல்-வலீத் சவுதியின் முதல் மன்னர் அப்துல்அஜிஸின் கொள்ளுப் பேரன் ஆவார்.
சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், அல்-வலீத் பின்னின் மாமா ஆவார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan