பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் முகாமிட்டுள்ள அமித்ஷா உறுதி

24 சித்திரை 2025 வியாழன் 08:34 | பார்வைகள் : 2194
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் அமித்ஷா சென்று ஆய்வு நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த, புகைப்படங்களை அமித்ஷா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள்.
இந்த துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1