பிரான்சின் மிக வயதான மனிதர்! - உயிரிழந்தார்.
7 புரட்டாசி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 22519
பிரான்சின் மிக வயதான மனிதர் என்ற பட்டத்தை தக்க வைத்திருந்த பெண்மணி ஒருவர் தனது 113வது வயதில் மரணமடைந்துள்ளார்.
குறிப்பிட்ட பெண்மணியின் பெயர் Elisabeth Collot ஆகும். ஜூன் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை 21ம் திகதி வரை இவர் பிரான்சின் மிக வயதான பெண்மணியாக இருந்தார்.
1903ஆம் வருடம் பிறந்த இவர், பிரான்சின் Grenoble நகருக்கு அருகில் அவருடைய மகன் Michael உடன் வசித்து வந்தார். பின்னர் அவர் உறக்கத்தின் போதே மரணமடைந்துள்ளதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.
இரண்டு உலகப்போர்களையும் சந்தித்த பெண்மணி. 6 பிள்ளைகள், 11 பேரப்பிள்ளைகள், 24 கொள்ளுப்பேரப்பிள்ளைகள்.... மூச்சு முட்டுகிறது... அத்தோடு இல்லாமல் 5 கொள்ளு கொள்ளுப்பேரப்பிள்ளைகள் (தமிழ்ல வார்த்தையே இல்லப்பா!!) கண்டவர் இவர்.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், பிரான்சின் வயதான பெண்மணி எனும் பட்டம் அவருக்கு சந்தோசம் அளிக்கவில்லை என தெரிவித்தார். 'இது மிக நீண்ட பயணம்!' என குறிப்பிட்டிருந்தமை நினைவு கூரத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan