Nanterre : மருந்தகத்தில் மீண்டும் கொள்ளை! ஒருவர் கைது!

22 சித்திரை 2025 செவ்வாய் 20:57 | பார்வைகள் : 8274
ஏப்ரல் 21 திங்கட்கிழமை Nanterre நகரில் உள்ள centrale de l’Assistance publique-Hôpitaux de Paris (AP-HP) மருந்தகத்தில் மீண்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் இரவு மருந்தகத்தில் சிலர் சுவர் ஏறி நுழைந்தனர். பாதுகாப்பு பணியாளர்கள் இதை கவனித்த உடனே காவல் துறையினரை அழைத்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்தில் கண்காணிப்பு பணியில் இருந்ததால், காலை 4 மணியளவில் ஒரு சந்தேக நபர் வாடகைக் காரை விட்டு வெளியேற முயன்ற போது கைது செய்தனர்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்த ஒரு பெரிய மருந்து திருட்டின் தொடர்ச்சியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நேரத்தில் ஒரு மில்லியன் யூரோ மதிப்புள்ள மருந்துகள் திருடப்பட்டன.
தற்போது இந்த வழக்கு "குற்றவாளிகள் தடுப்பு பிரிவுக்கு" மாற்றப்பட்டுள்ளது, ஏனெனில் இது சர்வதேச கும்பல்களின் வேலை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1