சிறைச்சாலைகள் மீது தாக்குதல் : அமைச்சர்களுடன் சென்று பார்வையிடும் பிரதமர்!
22 சித்திரை 2025 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 12106
பிரான்சில் உள்ள சிறைச்சாலைகள் மீது கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, நாளை ஏப்ரல் 23, புதன்கிழமை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அமைச்சர்கள் சிலருடன் Saint-Quentin-Fallavier சிறைச்சாலையை சென்று பார்வையிட உள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான சிறைச்சாலைகளில் இது மிக முக்கியமான ஒன்றாகும்.
உள்துறை அமைச்சர் Bruno Retailleau மற்றும் நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகிய இருவருடனும் இந்த பயணம் அமைய உள்ளது. பிரான்சில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் Parquet national antiterroriste (Pnat) இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், Isère மாவட்டத்தில் உள்ள மேற்குறித்த சிறைச்சாலைக்கு நாளை நேரில் விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.
Isère மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலை அதிகாரிகள் தங்கியிருக்கும் விடுதி ஒன்றினை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதிஷ்ட்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்தே இது தொடர்பான விசாரணைகள் எடுத்துக்கொள்வதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, திங்கட்கிழமை-செவ்வாய்க்கிழமைக்கு உட்பட்ட இரவில் பல தாக்குதல்கள் முறியறிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan