கார்த்திக் யோகி ரவி மோகன் கூட்டணியிலான புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
20 சித்திரை 2025 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 6305
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரவி மோகன். அதை தொடர்ந்து இவர் எம். குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களை கொடுத்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். இருப்பினும் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சில எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
அதே சமயம் நடிகர் ரவி மோகன் தொடர்ந்து பல படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார்.சந்தானம் பட இயக்குனரை நேரில் சந்தித்த ரவி மோகன்.... விரைவில் வெளியாகும் அறிவிப்பு?அந்த வகையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி மோகன். இன்னும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள ரவி மோகன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ரவி மோகன், கார்த்திக் யோகியை நேரில் சந்தித்திருக்கிறார்இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் இவர்களது கூட்டணியிலான புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் இனிவரும் நாட்களில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan