வெள்ளம் : இரு மாவட்டங்களுக்கு’ செம்மஞ்சள்’ எச்சரிக்கை!!

20 சித்திரை 2025 ஞாயிறு 09:36 | பார்வைகள் : 2091
ஏப்ரல் 20, இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இரு மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களுடன் மழை பெய்யும் எனவும், வேகமாக காற்றும் வீசும் எனவும் Meteo France அறிவித்துள்ளது. Dordogne மற்றும் Corrèze ஆகிய இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், மேலும் தென்கிழக்க்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என மொத்தம் 20 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கற்றும் 60 தொடக்கம் 80 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் மழை கொட்டித்தீர்க்கும் எனவும், நாளை திங்கட்கிழமை அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1