ஆடம்பர விடுதிக்கு கடுக்காய் கொடுத்தவர் - கையும் களவுமாக பிடிபட்டார்!!
21 ஐப்பசி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21988
விஷயத்தை கேள்விப்பட்டு, குறித்த நபரை உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள்! என்னாகிவிட்டது??!! நபர் ஒருவர் என்ன செய்திருக்கிறார் நட்சத்திர விடுதி ஒன்றில் சென்று தங்கியுள்ளார். மூன்று வேளை விலையுயர்ந்த உணவுகளை 'ஓடர்' செய்து சாப்பிட்டு மிக ஜாலியாக அந்த ஆடம்பர விடுதியில் தங்கியுள்ளார். ஆனால் சிக்கல் என்னவென்றால் அவர் விடுதியில் தங்குவதற்குரிய எந்த பணமும் தரவில்லை. நட்சத்திர விடுதி தானே... பணத்தை முடிவில் வாங்கிக்கொள்ளலாம் என அவர்களும் விட்டுவிட்டார்கள். 'பில்' நீ...,ண்டு..., ஒரு இலட்சம் யூரோக்களில் வந்து நின்றுவிட்டது. மூன்றுவேளை உணவு, அறை வாடகை, உடைகள் அயர்ன் செய்த காசு, அறை சுத்தம் செய்ததற்குரிய கட்டணம் என செலவு நீண்டுகொண்டே செல்ல, விஷயம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. விடுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த நபரை விசாரித்ததில், அவர் வீடற்றவர் என தெரியவந்துள்ளது. வேலை எதுவும் இல்லாத நபர் என்றும் அவரிடம் 'ஐந்து பைசா' கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. பிறகென்ன?? இப்போ புலம்பி என்ன பிரியோசனம் என விடுதிகாரர்களுக்கு சொல்லிவிட்டு, குறித்த நூதன திருடனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan