Champigny-sur-Marne : காதலியை கொன்ற காதலன் கைது!

17 சித்திரை 2025 வியாழன் 04:23 | பார்வைகள் : 3461
Champigny-sur-Marne பகுதியில், 42 வயதான பெண் பெரின் (Perrine) தனது படுக்கையிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவர் ஜிம்மி (38 வயது) கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காவலில் இருந்தபோது பெரினின் முகத்தில் காலால் அடித்ததாக ஒப்புக்கொண்டார். பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட காயமே அவருடைய மரணத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு ஜிம்மியின் தந்தை பெரினை எழுப்பச் செல்லும் போது, அவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து மருத்துவ குழுவினரை அழைத்தார்.
ஜிம்மி அதற்குள் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜிம்மியை மதுபோதையில் கைது செய்து பின்பு, குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1