மே 1 முதலாளிகள் வேலை செய்யலாம் ஆனால் தொழிலாளர்கள் அல்ல! சட்ட சிக்கல்!
16 சித்திரை 2025 புதன் 13:45 | பார்வைகள் : 5113
மே 1-ஆம் தேதி (தொழிலாளர் தினம்) வெதுப்பகங்களில் வேலை செய்ய அனுமதி அளிக்க அரசு தயாராக உள்ளது. தற்போது, முதலாளி தனது கடையை திறக்க அனுமதியுள்ளதாலும், அவரின் ஊழியர்கள் அந்த நாளில் வேலை செய்ய முடியாமல் இருப்பதும், சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் அதிக கேள்வியை எழுப்பி உள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில் அமைச்சர் Catherine Vautrin மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் Astrid Panosyan-Bouvet ஆகியோர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், ஊழியர்கள் விருப்பப்பட்டால் வேலை செய்ய அனுமதி பெறவும் ஆதரவளித்துள்ளனர்.
தேசிய பேக்கரி கூட்டமைப்புத் தலைவர் Dominique Anract (டொமினிக் அன்ராக்ட்) கூறுகையில், 100 ஆண்டுகளாக மே 1-ஆம் தேதி பேக்கரிகள் திறந்திருப்பதாகவும், இது கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு வாண்டே (Vendée) பகுதியில் ஐந்து பேக்கரிகள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஏனென்றால் அவர்கள் ஊழியர்களை வேலைக்கு வைத்திருந்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம் தெளிவாக இருப்பது அவசியம் என்றும் Dominique Anract கூறி உள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan