இளம் பெண்களிடம் நிர்வாண படங்கள் கேட்டவருக்கு சிறை!
27 ஐப்பசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 25228
'புடியுங்க சார்... புடிச்சு ஜெயில்ல போடுங்க!' என்பது போல் குறித்த அந்த நபரை பிடித்து சிறையில் அடைத்தாயிற்று. இணையத்தளம் ஊடாக பல பெண்களிடம் நிர்வாண படங்களை கேட்டுள்ளார் என அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ம் திகதி Marne மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 49 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இணையத்தளம் ஊடாக பல பெண்களிடம் நிர்வாண படங்களை அனுப்புங்கள் என கோரி.. நிர்வாண படங்களை வாங்கியுள்ளார். ஆனால் அது எதுவும் குற்றமில்லை. காவல்துறையினர் கைது செய்ததற்கு காரணம், இந்த நிர்வாண புகைப்படம் வாங்கும் பழக்கம் சிறுவர்களை நோக்கி சென்றதால் தான் எங்கிறார்கள்.
12 வயதுடைய சிறுமி ஒருத்தியுடன் நயமாக பேசி, அவரிடம் நிர்வாண படங்களை பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சிறுவர் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'அவர்களுக்கு இணையத்தை எப்படி பயன் படுத்தவேண்டும் என புரிய வைப்பதற்காகவே என் கட்சிக்காரர் அவ்வாறு நடந்துகொண்டார்!' என வழக்கறிஞர் வாதாடியும் தான் பார்த்தார். ம்ஹூம்ம்ம்... ஒரு நாள் தண்டனையைக் கூட குறைக்க முடியவில்லை!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan