'குட் பேட் அக்லி' படத்தின் கதை லீக் ஆகிவிட்டதா?
14 பங்குனி 2025 வெள்ளி 12:41 | பார்வைகள் : 3500
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் கதை இணையதளங்களில் லீக் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் ‘ரெட்ரோ’ படத்தின் கதை போல் உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘குட் பேட் அக்லி’படத்தின் கதை பற்றி லீக்கான தகவலின்படி, யாருக்கும் அஞ்சாத ஒரு டான், தனது வன்முறையான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், அதில் இருந்து வெளியேறி சமூகத்தில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால் அவனது இருண்ட கடந்த காலமும், வன்முறை செயல்களும் அவனை தொடர்ந்து பின்னே வருகிறது. அவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு, குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் போது, ஹீரோவின் கனவு நனவானதா என்பது தான் கதை என கூறப்படுகிறது.
அதேபோல் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் டீசரில் இருந்து கிடைத்த தகவலின்படி, கேங்ஸ்டராக இருக்கும் சூர்யா, தனது காதலியை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறார். ஆனால், அது அவரால் முடிகிறதா? அல்லது அவர் மீண்டும் தனது கேங்ஸ்டர் வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய சூழ்நிலை உருவாகிறதா? என்பது தான் கதை என தெரிகிறது.
இரண்டு படங்களின் கதைக்களம் ஒரே மாதிரி இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. எனவே, இரண்டும் திரையரங்கில் வெளிவந்த பிறகே உண்மையாக உள்ளதா என்பது தெளிவாக தெரியும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan