கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி!
13 பங்குனி 2025 வியாழன் 14:13 | பார்வைகள் : 3307
தற்போது தமிழ் சினிமாவில் செம பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வா வாத்தியாரே என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
இதையடுத்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சர்தார் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் கார்த்தி. அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 படமும் கார்த்தியின் கைவசம் உள்ளது. மேலும் மாரி செல்வராஜிடமும் கதை கேட்டு அவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் கார்த்தி. இப்படி கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.
அதன்படி அண்மையில் இயக்குனர் கெளதம் மேனன், நடிகர் கார்த்தியை சந்தித்து ரொமாண்டிக் கதை ஒன்றை கூறி இருக்கிறார். அது கார்த்திக்கு பிடித்துப் போக அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்ய சொல்லி உள்ளாராம் கார்த்தி. வெந்து தணிந்தது காடு படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜெயமோகன் தான் இப்படத்திற்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளாராம். இப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாம்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan