Samuel Paty : கல்லூரிக்கு பெயர் மாற்றம்!!
10 பங்குனி 2025 திங்கள் 17:58 | பார்வைகள் : 10865
பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் பெயரை அவர் சேவையாற்றிய கல்லூரியின் பெயராக மாற்றப்பட உள்ளது.
இந்த பெயர் மாற்ற கோரிக்கையினை கல்லூரி நிர்வாகம் கோரியிருந்த நிலையில், Samuel Paty இன் குடும்பத்தினரும், நகரசபையும் அனுமதி வழங்கியுள்ளது. அதை அடுத்து Conflans-Saint-Honorine (Yvelines) நகரில் உள்ள collège du Bois d'Aulne எனும் அப்பாடசாலை collège du Samuel Paty என பெயர் மாற்றப்பட உள்ளது.
இம்மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று Samuel Paty, இளம் பயங்கரவாதி Abdoullakh Anzorov இனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan