25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை
10 பங்குனி 2025 திங்கள் 14:41 | பார்வைகள் : 4735
ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் 'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா. தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். 'பூவே உனக்காக' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை இவர் திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2014ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ' நகர வரிதி நடுவில் நிஞ்சன்' எனும் படத்தின் மூலம் நடிப்பிற்கு கம்பேக் தந்தார் சங்கீதா.
அதன்பிறகு மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 2023ம் ஆண்டில் வெளிவந்த 'சாவெர்' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சில மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார் சங்கீதா. கடைசியாக தமிழில் 2000-மாவது ஆண்டில் கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் நடித்தார்.
தற்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார் சங்கீதா. பரத் நடிப்பில் உருவாகி வரும் 'காளிதாஸ் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சங்கீதா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பவானி ஸ்ரீ, அபர்ணதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan