மாதவிடாய் நாட்களில் சிறப்பு விடுமுறை... சட்டமாகுமா..??!!
8 பங்குனி 2025 சனி 15:00 | பார்வைகள் : 11379
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அலுவலக விடுமுறை வழங்குவது தொடர்பில் பல்வேறு நகரசபைகள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.
பரிஸ் நகரசபை இது தொடர்பில் பல நாட்களாக ஆலோசித்து வருகிறது. அதேவேளை லியோன் நகரசபை இந்த விடுமுறையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து பரீட்சாத்த நடவடிக்கையாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இதனை சட்டமாக இயற்றும் படி அரசாங்கத்திடம் நகரசபை கோரியுள்ளது.
இந்த விடுமுறையானது மாதவிடாய் காலங்களில் மிகவும் வலியையும், அதிகூடிய இரத்தப்போக்கினால் வரும் தலைசுற்று, மயக்கம் போன்ற உபாதைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு (மருத்துவச் சான்றிதழ் கட்டாயமானது) மட்டுமே வழங்கப்படும். லியோன் நகராட்சியில் உள்ள அரச திணைக்கழகங்களில் பணிபுரியும் 2,500 பெண்களில் 130 பெண்கள் தற்போது இந்த விடுமுறையை பெற்றுக்கொள்கின்றனர்.
மாதத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்படும் இந்த விடுமுறையை அரசு சட்டமாக இயற்றி, நாடு முழுவதும் அதனை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என இந்த சர்வதேச பெண்கள் தின நாளில் லியோன் நகரசபை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan