பிரித்தானியாவில் 1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க நாணயம்! முதல் முறையாக கண்டுபிடிப்பு
2 சித்திரை 2025 புதன் 15:54 | பார்வைகள் : 1699
பிரித்தானியாவில் நபர் ஒருவர் கண்டெடுத்த ரோமானிய தங்க நாணயம் 5000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தின் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (76).
இவர் கடந்த ஆண்டு வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றை கண்டெடுத்தார்.
பின்னர் அந்த நாணயம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போது ரோமானிய நாணயம் அது என தெரிய வந்தது.
அதிலும் ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த தங்க நாணயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாணயம், பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
ரான் வால்டர்ஸ் தான் கண்டெடுத்த நாணயத்தை ஏலத்தில் விட்டார். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த நாணய சேகரிப்பில் ஆர்வம் கொண்ட நபர் ஒருவர், அந்த நாணயத்தை 5,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் வாங்கினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan