விபத்துக்குள்ளான விமானங்கள்!!
25 பங்குனி 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 14893
பிரான்சில் இரண்டு கண்காணிப்பு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது. மூவர் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்சின் வடகிழக்கு பகுதியான Saint-Dizier (Haute-Marne) நகரில் இச்சம்பவம் மார்ச் 25, இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரெஞ்சு இராணுவத்துக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானங்கள் (avions de la patrouille) இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், பிற்பகல் 3.35மணி அளவில் கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளானது.
113 ஆவது விமானத்தளத்தில் ( base aérienne 113 de Saint-Dizier) இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இரு விமானங்களின் விமானிகளும், மற்றுமொரு நபரும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan