பிரபாஸிற்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
25 பங்குனி 2025 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 6813
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும் இடையில் விஜய், ரஜினி, கமல், ஷாருக்கான் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். அதன் பின்னர் இனி வில்லனாக நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது படமாக உருவாகும் இதன் பட்ஜெட் மட்டும் ரூ. 300 கோடி என கூறப்படுகிறது.
இதில் பிரபாஸூக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் இதற்கான சந்திப்பு நடைபெற்றதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடிக்கவுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan