யூதர்கள் அனைவரும் முறைதவறிப் பிற்ந்hவர்கள் - யூதகுரு மீது தாக்குதல்!!
23 பங்குனி 2025 ஞாயிறு 19:41 | பார்வைகள் : 7178
யூதர்கள் அனைவரும் முறைதவறி (அவர் உண்மையாக சொன்ன சொல் நாகரிகம் கருதி மாற்றிச் சொல்லப்பட்டுள்ளது) பிறந்தவர்கள் என்று கூறி ஓர்லியோனில், ரபன் (Rabbin) எனப்படும் யூத குரு அரி எங்கெல்பேர்க் (Arié Engelberg) தாக்கப்பட்டுள்ளார்.

யூத வழிபாட்டுத் தலமான சினேகொக்கில் (synagogue) இருந்து திரும்பிய இவரை, வழிமறித்த இருவர், தொலைபேசியில் காணொளியைப் பதிவு செய்யத படி, நீ யூதனா எனக்கேட்டு, யூதர்கள் அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று கூறித் தாக்கியுள்ளனர். அதே நேரம் இவர் முகத்திலும் துப்பி உள்ளனர். இவரின் தோளிலும் கடித்தும் உள்ளனர்.

தாக்குதலின் காணொளியுடன் இவர் தனது வாக்குமூலத்தை வழங்கி உள்ளார்.
தொடர்ச்சியாக யூத எதிர்ப்புவாதம் பெருகி வரும் நிலையில். அதற்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல். பகிரங்கமாக யூத எதிர்ப்புவாதத்தை நேற்றுக்கூட ஜோன் லுக் மெலோன்சோன் பகிரங்கமாக வெளிப்படுததியது இப்படியான தாக்குதல்களை அதிகரிக்கும் ஆபத்தை உருவாக்கி உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan