அப்பா மகள் நெருங்கிய பிணைப்புக்கு காரணம் இதுவா?
18 பங்குனி 2025 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 3292
ஒவ்வொரு உறவும் அதன் தனித்துவமான முறையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தாய்-மகள் உறவு ரொம்பவே சிறந்த ஒன்றாக கருதப்பட்டாலும், ஒருபடிக்கு மேல் தந்தை- மகள் இடையான பிணைப்பு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மகள்களின் சூப்பர் ஹீரோ அவர்களது தந்தை தான். இந்த உலகில் தன் தந்தைக்கு யாரும் இல்லை என்று அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இப்படி தந்தை மகள் உறவுக்கு இடையே ஏன் இவ்வளவு வலுவான பிணைப்பு இருக்கிறது? இதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. அவை என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தந்தை தன் மகளை எப்போதும் பாதுகாப்பாக உணர வைப்பார் இதன் காரணமாக தான் ஒவ்வொரு மகளும் தன் தந்தையிடம் அதிகமாக அன்பு வைக்கிறாள். ஆக மொத்தத்தில் ஒவ்வொரு பெண் பிள்ளைகளும் தங்களது தந்தையே ஒரு பாதுகாப்பான இடம் என்று உணர்கிறார்கள்.
தனது தந்தையின் இதயம் கருணைகள் நிறைந்துள்ளதால் மகள்கள் எப்போதும் தந்தையிடம் இருப்பதை விரும்புகிறார்கள். இதன் காரணமாக தான் மகள்கள் தங்கள் தந்தையே ரொம்பவே நேசிக்கிறார்கள்.
எந்த சூழ்நிலை வந்தாலும் அது நல்லது அல்லது கெட்டது என எதுவாக வந்தாலும் எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரே நபர். காரணமாக தான் மகள்கள் தங்கள் தந்தையை மிகவும் விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு தந்தையும் தனது மகள்களின் சிறிய தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்வார்கள். இதனால் மகள்கள் தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களை தன் தந்தையிடம் மனம் திறந்து பேசுகிறார்கள்.
அப்பாக்கள் பெரும்பாலும் தங்களது மகள்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்கள். மகள்கள் எப்போதுமே தங்கள் தந்தையின் எண்ணங்கள் மற்றும் அறிவுரைகளை முக்கியமாக கருதுகிறார்கள்.
தந்தை என்றாலே ரொம்பவே ஜாலியான மற்றும் அன்பான குணம் கொண்டவர். இந்த காரணத்திற்காக தான் மகள்கள் தங்கள் தந்தையிடம் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.
பெண் குழந்தையின் முதல் வழிகாட்டி அவர்களது தந்தையே. பெண்கள் ஒருபோதும் பலவீனமானவர்கள் அல்ல என்றும், தங்களின் நிரூபிக்க அவர்களுக்கு முழு உரிமையை உண்டு என்றும், அவர்கள் தங்களது மகள்களுக்கு கற்பிக்கிறார்கள். இதனால்தான் மகள்கள் தங்கள் தந்தையுடன் அதிகமாக இணைகிறார்கள்.
ஒவ்வொரு தந்தையும் தனது மகளின் கனவுகளை தனது சொந்த கருதுகிறார் இதனால் அவர் தனது மகளின் கனவுகளின் நிறைவேற்றுவதில் வியர்வையை ரத்தமாக சிந்தி, அதை முடிவில் நிறைவேற்றுகிறார். இந்த காரணத்திற்காக தான் ஒவ்வொரு மகள்களும் தங்கள் தந்தையே 'சூப்பர் ஹீரோ' என்று சொல்லுகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan