2000 ஆண்டுகள் பழமையான தங்க கிரீடம் திருட்டு! குற்றம்சாட்டிய மற்றொரு நாடு
31 தை 2025 வெள்ளி 08:32 | பார்வைகள் : 3658
நெதர்லாந்து நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தங்க கிரீடம் திருடுபோனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள Assen நகரில் தி ட்ரென்ட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பல்வேறு பழமையான புராதான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ரோமானியாவின் 2,000 ஆண்டுகள் பழமையான டசியா நாகரிகத்தை சேர்ந்த தங்க கிரீடமும் அடக்கம்.
இந்த நிலையில் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் மற்றும் தங்க காப்புகள் திருடுபோயுள்ளன.
மர்ம கும்பல் ஒன்று இரவில் சுவற்றை துளையிட்டு குறித்தப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், திருடுபோன தங்க கிரீடத்தை மீட்க பொலிஸார் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மூவரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ரோமானியா அரசு பரபரப்பு குற்றச்சாட்டை நெதர்லாந்து மீது வைத்துள்ளது. அருங்காட்சியகத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியதாக கூறியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan