எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரிய அதிஷ்டசாலி!!
17 மாசி 2018 சனி 10:29 | பார்வைகள் : 11054
Ludger Sylbaris - ஆபிரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் இணைத்த கறுப்பின மனிதன். வேறு எந்த அடையாளங்களும் அற்ற ஒரு சாதாரண நபரை ஒரு நாள் இந்த உலகமே அடையாளம் கண்டுகொண்டது.
1875 ஆம் ஆண்டு பிரெஞ்சுத்தீவான Martinique இல் பிறந்த இவர் St. Pierre நகரில் ஒரு தொழிலாளியாக பணி புரிந்தார். அனேகமாக அந்த தீவில் எவருக்கும் இப்படி ஒரு நபர் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பே இல்லாத 'போர'டிக்கும் வாழ்க்கை இவரோடது.
மே மாதம் 7 ஆம் திகதி 1902 ஆம் ஆண்டு இரவு, Ludger Sylbaris ஒரு மதுபான விடுதிக்குச் செல்கிறார். மது அருந்துகிறார். அப்போது எதிர்பாரா விதமாக ஒரு குழு மோதல் ஏற்படுகிறது. மோதலில் Ludger Sylbaris உம் கலந்துகொள்கிறார். காவல்துறை மதுச்சாலைக்கு வருகிறது.
அங்கிருந்தவர்களில் Ludger Sylbaris ஐ மாத்திரம் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். (*தாக்குதல் குறித்து சரியான தகவல்கள் எங்கும் பதிவாகவில்லை. சில இடங்களில் இவர் மதுபோதையில் கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.)
எது எப்படியோ, அன்று இரவு இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அது ஒரு 'ஒற்றைச்சிறை' ஒரே ஒரு நபர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய ஜன்னல்கள் அற்ற மிக கனமான மதில்கள் கொண்ட ஒரு பண்டைய காலத்து சிறை. இரும்பு கதவு ஒன்று மாத்திரமே உள்ளது. அதன் இடுக்கு வழியாக வரும் வெளிச்சமும் காற்றும் தான் அவருக்கானது.
நாளை காலை விசாரணை. தயாராக இருக்கும்படி பணிக்கபட்டு, அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெளியில் வந்து மதுச்சாலையில் பணிபுரியும் ஒருவனது 'முகரை'யை பெயர்ப்பதாக தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டார் Ludger Sylbaris.
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல், மறுநாள் காலை எரிமலை வெடித்தது...!!
-நாளை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan