பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?
29 தை 2025 புதன் 15:46 | பார்வைகள் : 5625
பொதுவாக வெப்பமண்டல காலநிலையில் வளரும் பேரீச்சை மரங்களிலிருந்து கிடைக்கும் பேரீச்சம்பழங்கள் இயற்கையான சர்க்கரையால் நிரம்பியுள்ளன. இனிப்பு நிறைந்த பழங்களாக இருந்தாலும் கூட நிறைய ஆரோக்கிய நன்மைகளை பேரீச்சம்பழங்கள் கொண்டுள்ளன. பேரீச்சம்பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இதனை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பேரிச்சம்பழங்கள் உதவியாக இருக்கின்றன. இவற்றில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பேரீச்சம்பழங்களானவை வைட்டமின் சி, பி1, பி2, பி3, பி5, ஏ மற்றும் கே ஆகியவற்றின் நல்ல களஞ்சியமாகவும் உள்ளது. தவிர இந்த பழங்களில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. எனவே நாம் தினமும் ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்களை தவறாமல் சாப்பிட்டு வருவது நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பேரீச்சம்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை: ஏற்கனவே மேலே குறிப்பிட்டதற்கு போல நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிரம்பியுள்ளன.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பேரீச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து காணப்படுவதால் மலசிக்கல் பிரச்னையின்றி வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து செரிமான பிரச்சனைகளில் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
ஆற்றல் அளவை அதிகரிக்க செய்கிறது: பேரீச்சம்பழங்களில் காணப்படும் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள், இந்த அற்புத பழங்களை சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலை அளிக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைந்த பேரீச்சம்பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் பேரீச்சம்பழங்களில் காணப்படுகிறது. இவை ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதோடு மற்றும் இதயம் சிறப்பாக செயல்பட துணை புரிகின்றன. குறிப்பாக அத்தியாவசிய தாதுவாக பார்க்கப்படும் பொட்டாசியம் இதய துடிப்பு, சுவாசம் மற்றும் தசை செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவுகிறது.
எலும்புகளை வலுவாக வைக்கும்: இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. இவை அனைத்துமே எலும்புகள் வலுவாக இருக்க மற்றும் எலும்பு அடர்த்தி சரியாக இருக்க மிகவும் அவசியமானவை ஆகும்.
மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: மூளையை ஆரோக்கியமாக வைக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் பேரீச்சம்பழங்களில் நிறைந்துள்ளன.
ரத்த சோகை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது: பொதுவாக இரும்புச்சத்து குறைபாடின்றி இருப்பது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ரத்த சோகையை தடுக்கிறது.இதற்கு பேரீச்சம்பழங்களில் காணப்படும் அதிக இரும்புச்சத்து உதவியாக இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan