லூவர் : மக்ரோனின் புதிய அறிவிப்புகள்!!
28 தை 2025 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 7220
லூவர் அருங்காட்சியகத்தினை நவீனமயமாக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணி அளவில் லூவருக்கு வருகை தந்த ஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்து சில முக்கிய விடயங்களை அறிவித்தார்.
முகப்பு!
லூவர் அருங்காட்சியகத்தினை கட்டம் கட்டமாக நவீனமயமாக்கும் திட்டங்களே அறிவிக்கப்பட்டுள்ளது. லூவருக்கு மிக பிரம்மாண்டமான முகப்பு மண்டபம் ஒன்று கட்டப்படும் என மக்ரோன் அறிவித்தார்.
மோனா-லிசா!
மோன-லிசா ஓவியத்தை காட்சிப்படுத்த என தனி கூடம் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு சிறப்பு கெளரவம் வழங்கப்படும் எனவும் மக்ரோன் தெரிவிதார்.
கட்டண உயர்வு!
ஐரோப்பியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களை கவரும் நோக்கில் லூவர் நவீனமயமாக்கப்படும் என தெரிவித்த மக்ரோன், ஐரோப்பியர் இல்லாதவர்களுக்கு என சிறப்பு கட்டணங்கள் அறிவிக்கப்படும் எனவும், அது சற்று அதிகமாக இருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
€10 மில்லியன்!
கலாசார அமைச்சு லூவருக்காக €10 மில்லியன் யூரோக்களை வழங்கும் எனவும் மக்ரோன் உறுதியளித்தார்.
€800 மில்லியன் யூரோக்கள்!
லூவர் அருங்காட்சியகத்தினை மூடாமல் பணிகளை மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் இடம்பெற உள்ள இந்த பணிக்காக 700 தொடக்கம் 800 மில்லியன் வரை செலவாகலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாக மக்ரோன் குறிப்பிட்டார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan