சவுதி அரேபிய அணியை விட்டு வெளியேறும் நெய்மர்
28 தை 2025 செவ்வாய் 09:59 | பார்வைகள் : 4365
பிரேசிலிய கால்பந்து உச்ச நட்சத்திரமான நெய்மர் சவுதி அரேபிய அணியான அல் ஹிலாலிடம் இருந்து வெளியேறியுள்ள உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரஸ்பர ஒப்புதலின் பேரில் இது நடந்துள்ளதாகவும் சவுதி புரோ லீக் சாம்பியன்கள் செவ்வாயன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளனர்.
32 வயதான நெய்மருக்கு அக்டோபர் 2023ல் உருகுவேவுக்கு எதிரான பிரேசிலின் உலகக் கிண்ணம் தகுதிச் சுற்று ஆட்டத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டது.
ஆனால் அதன் பின்னர் அவரால், தனது முழு திறமையையும் வெளிக்காட்ட முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடக பதிவொன்றில் குறிப்பிட்ட அல் ஹிலால் நிர்வாகம்,
அல் ஹிலால் கிளப் நிறுவனமும் நெய்மர் ஜூனியரும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் தங்கள் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2023ல் PSG அணியில் இருந்து வெளியேறி சுமார் 98 மில்லியன் டொலர் தொகைக்கு அல் ஹிலால் அணியில் இணைந்த பின்னர், வெறும் 7 ஆட்டங்களில் மட்டுமே நெய்மரால் விளையாட முடிந்துள்ளது.
இந்த நிலையில், நெய்மருக்கு மிகவும் பிடித்த அணிகளில் ஒன்றான Santos அணிக்கே அவர் திரும்புவார் என பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 2013ல் பார்சிலோனா அணியில் சேரும் பொருட்டு Santos-ல் இருந்து வெளியேறியிருந்தார்.
ஆனால் 2017ல் 222 மில்லியன் யூரோ என்ற உலக சாதனை கட்டணத்தில் பார்சிலோனா அணியில் இருந்து PSG அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan